மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்- ராகுல் காந்தி

0 1029
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும்- ராகுல் காந்தி

மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்படும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பஞ்சாபில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, கொரோனா பரவலுக்கு மத்தியில் 3 வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டிய அவசியம் என்ன என கேள்வியெழுப்பினார்.

விவசாயிகள் நலனுக்காக 3 வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டு இருப்பதாக மோடி தெரிவித்ததை சுட்டிக்காட்டிய அவர், அப்படியெனில் ஏன் நாடாளுமன்றத்தில் வெளிப்படையாக அவை குறித்து விவாதிக்கவில்லை எனவும் ராகுல் காந்தி கேள்வியெழுப்பினார்.

ஹத்ராஸ் சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் ராகுல் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments