இந்திய கடற்படைக்கு சொந்தமான பவர் கிளைடர் விமான விபத்தில் அதிகாரிகள் இருவர் உயிரிழப்பு

0 1036
இந்திய கடற்படைக்கு சொந்தமான பவர் கிளைடர் விமான விபத்தில் அதிகாரிகள் இருவர் உயிரிழப்பு

கேரள மாநிலம் கொச்சியில் இந்திய கடற்படைக்கு சொந்தமான கிளைடர் விமானம் விபத்துக்குள்ளானதில், கடற்படை அதிகாரிகள் இருவர் உயிரிழந்தனர்.

கொச்சி கடற்படை விமான நிலையம் அருகே, வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படைக்கு சொந்தமான பவர் கிளைடர் விமானம், மட்டாஞ்சேரி பாலத்துக்கு எதிர்ப்புறம் கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்து விரைந்து வந்த மீட்புபடையினர் கிளைடர் விமானத்தில் சிக்கியிருந்த, லெப்டினன்ட் ராஜீவ் ஜா, மற்றும் சுனில் குமார் ஆகிய இரு அதிகாரிளையும் மீட்டு ஐஎன்எஸ் சஞ்சீவனி ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். விரிவான விசாரணைக்கு பிறகே விபத்துக்கான காரணம் குறித்து தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments