7 வயது சிறுமியைக் கடித்துக் குதறிய பிட்புல் வகை நாய்

0 2107
7 வயது சிறுமியைக் கடித்துக் குதறிய பிட்புல் வகை நாய்

அர்ஜென்டினாவில் பிட்புல் வகை நாயிடம் சிக்கிய 7 வயது சிறுமியை பலர் இணைந்து போராடி மீட்டனர்.

தலைநகர் பியூனஸ் அர்ஸில் கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பெண் தனது 7 வயது மகளுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதி வழியாக அழைத்துச் செல்லப்பட்ட பிட்புல் ரக நாய் ஒன்று திடீரெனை சிறுமி மீது பாய்ந்து கடித்தது.

நாயிடம் சிக்கிய சிறுமியைக் காப்பாற்ற அவரது தாய் மற்றும் அக்கம் பக்கத்தினர் கடும் போராட்டம் நடத்தினர்.

மேலும் நாயை அடித்து உதைத்தனர். ஆனாலும் நாயின் பிடியிலிருந்து சிறுமியை மீட்பது இயலாத காரியமாக இருந்தது.

இறுதியில் நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் நாயின் வாயில் சிக்கிய சிறுமி காலில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments