ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் பாக்.மீது இந்தியா சரமாரியாக பாய்ச்சல்

0 3111

தீவிரவாதம் குறித்த விவாதம் எப்போது நடந்தாலும், தான் அதற்கு பலியாகி விட்டதாக பாகிஸ்தான் நாடகமாடுவது வாடிக்கையாகி விட்டதாக இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இதை வெளியிட்ட ஐ.நா.வுக்கான இந்திய செயலர் விமார்ஷ் ஆர்யன்,  ஐ.நா.வால் பட்டியலிடப்பட்ட பயங்கரவாதிகளுக்கும், பயங்கரவாத அமைப்புகளுக்கும் பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதாக சாடினார். சர்வதேச நாடுகளின் கவனத்தை தவறாக திசை திருப்பும் திட்டத்துடன், பாகிஸ்தான் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என்றார் அவர்.

சொந்த நாட்டில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தும் பாகிஸ்தானுக்கு இந்தியா சிறுபான்மையினரை துன்புறுத்துகிறது என்று கூற என்ன அருகதை உள்ளது என அவர் கேள்வி எழுப்பினார்.

சிந்து மாகாணத்தில் இந்துப் பெண்ணை கடத்தி மதமாற்றம் செய்த காட்டுமிராண்டி ஆட்சி நடத்தும் பாகிஸ்தான், ஜனநாயகம் முழுமையாக தழைத்தோங்கும் இந்தியாவில், பெண்கள் எப்படி பாதுகாப்பாக நடத்தப்படுகிறார்கள் என்பதை பற்றி அறியாமல் பேசுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments