கர்நாடகத்தில் முகக் கவசம் அணியாவிட்டால் ரூ.1000 அபராதம்

0 937

கர்நாடகத்தில் முகக்கவசம் அணியாமல் வீட்டைவிட்டு வெளியே வரும் நபர்களிடம் இருந்து ரூ.1,000 அபராதம் வசூலிக்கப்படும் என மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் கூறியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் சரியாக பின்பற்றுவது இல்லை என்றார்.

குறிப்பாக மக்கள் முகக்கவசம் அணிவது இல்லை என்ற அவர், முக க் கவசம் அணியாமல் பொது இடங்களில் வருவோருக்கான அபராதம் 200 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்படும் என்றார். கிராமப்புறங்களில் முகக்கவசம் அணியாமல் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அவர் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments