அமெரிக்காவை விட புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம்- அதிபர் டிரம்ப்

0 2869
அமெரிக்காவை விட புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம்- அதிபர் டிரம்ப்

அமெரிக்காவை விட புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என்று டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது ஓஹியோ மாகாணம் கிளீவ்லேண்டில் டிரம்பும் -ஜோ பிடனும் விவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய டிரம்ப், கொரோனா இறப்புகள் குறித்த துல்லியமான புள்ளிவிவரங்களை இந்தியா பகிர்ந்து கொள்ளவில்லை என்றார்.

உலகின் புவி வெப்பமடைதலில் 15 சதவீதத்திற்கு அமெரிக்கா தான் பொறுப்பு என்று ஜோ பிடன் கூறினார். ஆனால் டிரம்ப், அமெரிக்காவை விட புவி வெப்பமடைதலுக்கு இந்தியா தான் காரணம் என்று குற்றம் சாட்டினார்.காற்று மாசுபடுவதில் இந்தியாவின் பங்கு அதிகம் என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments