செவ்வாய் கிரகத்தில் நிலத்திற்கு கீழ் புதைந்த 4 ஏரிகள் கண்டுபிடிப்பு- விஞ்ஞானிகள் தகவல்

0 3148
செவ்வாய் கிரகத்தில் நிலத்திற்கு கீழ் புதைந்த 4 ஏரிகள் கண்டுபிடிப்பு- விஞ்ஞானிகள் தகவல்

செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தின் அருகில் நிலத்துக்கு அடியில் 1.5 கிலோ மீட்டர் கீழே புதைந்துபோன 4 ஏரிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

செவ்வாயை சுற்றி வரும் மாஸ்எக்ஸ்பிரஸ் என்ற ஆய்வு களத்தின் ரேடார் தரவுகளை கொண்டு நடந்த ஆய்வில், செவ்வாயின் தென் துருவத்தில் நிலப்பரப்புக்கு அடியில் சுமார் 20 கிலோ மீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதற்கான அறிகுறிகளை 2018ல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தின் தென் துருவத்தின் அருகில் நிலத்துக்கு அடியில் 1.5 கிலோ மீட்டர் கீழே புதைந்துபோன மேலும் 3 ஏரிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் இந்த ஏரிகள் அனைத்தும் உப்புதன்மை வாய்ந்தவை என்று கருதப்படுவதால் அதில் நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது குறித்த சந்தேகமும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments