தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்

0 1340
தமிழகத்தில் காலியாக உள்ள 3 தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் இல்லை - தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்த வேண்டாம் என தேர்தரல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இந்த இரண்டு தொகுதிகளுடன், கேரளா, அசாமில் காலியாக உள்ள தலா 2 தொகுதிகள் மற்றும் மேற்குவங்கத்தில் காலியாக உள்ள ஒரு தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாநிலங்களின் சட்டப்பேரவையின் ஆயுள் வரும் மே மற்றும் ஜூன் மாதங்களில் முடிவடைகிறது. இந்த தொகுதிகளுக்கு தற்போது தேர்தல் நடத்துவதில் சிரமம் உள்ளதாக சம்பந்தப்பட்ட அரசு தலைமைச் செயலாளர்கள் தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் காலியாக உள்ள மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடத்துவது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக எம்எல்ஏக்கள் கே.பி.பி சாமி, காத்தவராயன் ஆகியோர் காலமானதால் திருவொற்றியூர் தொகுதியும், குடியாத்தம் தொகுதியும் காலியாக உள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments