விவசாய மசோதாவுக்கு எதிர்ப்பு... திமுக கூட்டணிக் கட்சிகள் போராட்டம்!

0 749

த்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க கூட்டணிக் கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவை எதிர்க்கட்சிகள் மற்றும் விவசாயிகளின் எதிர்ப்புகளை மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கையெழுத்திட்டதையடுத்து மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.

image

பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், மூன்று மசோதாக்களுக்கும் விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவருகின்றனர். இந்த நிலையில், வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் திமுக தோழமை கட்சிகள் சார்பில் இன்று போராட்டம் நடத்தி வருகின்றனர். திமுக வின் தோழமைக் கட்சிகளான காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் பங்கேற்றன. போராட்டத்தில் பங்குகொள்வதற்கு முன்னதாக, ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமி அரசைக் கடுமையாகச் சாடினார் என்பது குறிப்பிடத்தக்கது!

 
SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments