சர்வ சாதாரணமாக தென்னை மரத்தில் தலைகீழாக ஏறி இறங்கும் 14 வயது சிறுவன்

0 2212
சர்வ சாதாரணமாக தென்னை மரத்தில் தலைகீழாக ஏறி இறங்கும் உசிலம்பட்டி சிறுவனின் அசாத்திய சாதனை முயற்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

சர்வ சாதாரணமாக தென்னை மரத்தில் தலைகீழாக ஏறி இறங்கும் உசிலம்பட்டி சிறுவனின் அசாத்திய சாதனை முயற்சி காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

திடியன் கிராமத்தைச் சேர்ந்த முத்துக்குமாரின் 14 வயது மகன் தனோஜ், ஊரடங்கு காலத்தில் அடிக்கடி தென்னை மரங்களில் ஏறி பயிற்சி பெற்று வந்துள்ளான்.

வழக்கமாக, தென்னை மரம் ஏறுபவர்கள் வழுக்காம இருக்க காலில் தலை நார் மாட்டிக்கொள்வது வழக்கம். ஆனால், இச்சிறுவன் இது எதுவும் இன்றி, சரசரவென தலைகீழாக தென்னை மரத்தில் ஏறி, இறங்கி சாதனை படைத்து வருகிறான்.

தாமாகவே தென்னை மரம் ஏற கற்றுக்கொண்ட தனோஜின் முயற்சிக்கு பாராட்டுக்கள் குவிகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments