விஜயகாந்தின் உடல் நிலை குறித்து விசாரித்தார் முதலமைச்சர்

0 7884

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி:

தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி அறிந்து, பிரேமலதாவிடம், தொலைபேசி வாயிலாக விசாரித்ததாகவும், விஜயகாந்த் பூரண நலம்பெற்று வீடு திரும்ப எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓபிஎஸ்:

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள விஜயகாந்த் விரைவில் பூரண குணமடைந்து, இயல்புநிலைக்கு திரும்பிட இறைவனை வேண்டிக் கொள்வதாக, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின்:

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்த், விரைவில் முழுநலம் பெற்று பொதுப்பணியில் மீண்டும் முழு உற்சாகத்துடன் செயல்பட வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விழைவு தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments