மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்... வேளாண் மசோதாக்கல் குறித்து விவாதம்

0 738
மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்... வேளாண் மசோதாக்கல் குறித்து விவாதம்

திமுக கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் குறித்து, மு.க.ஸ்டாலின் தலைமையில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொது செயலாளர் ஈஸ்வரன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, உள்ளிட்டோர்  பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில், மத்திய அரசின் வேளாண் மசோதாக்களுக்கும் எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, வரும் 25ஆம் தேதி நடத்தும் சாலை மறியல் மற்றும் சட்ட நகல் எரிப்பு போராட்டத்திற்கு ஆதரவளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments