தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டில் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்

0 676
தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டில் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்

தமிழக சட்டப்பேரவையில் நடப்பு நிதி ஆண்டில் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதிநிலை அறிக்கையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

கொரோனா நோயாளிகளுக்கான உணவு, மருத்துவ செலவுகளுக்காக 3,359 கோடியே 12 லட்சம் ரூபாய் கூடுதல் தொகை துணை மதிப்பீடுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் குடும்ப அட்டைதாரர்கள், நலவாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட 4,218 கோடியே 20 லட்சம் ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளதோடு, தொற்று மருந்துகள், நோய் கண்டறியும் சாதனங்கள், ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கை வசதி உள்ளிட்டவைகளுக்கு 1109 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 12,845 கோடி ரூபாயை ஒதுக்க துணை மதிப்பீடுகள் வழிவகை செய்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments