சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையைத் தவிர்க்க.. இந்தியாவுடன் தொடர்புகளை வலுப்படுத்த முயலும் ஆஸ்திரேலியா..!

0 4538

சீனாவைச் சார்ந்திருக்கும் நிலையைத் தவிர்க்க ஆஸ்திரேலியா, இந்தியாவுடனான தொடர்புகளை வலுப்படுத்த முயன்று வருகிறது.

ஆஸ்திரேலியாவில் சீனாவின் முதலீடும், சீன நிறுவனங்களின் வணிகமும், சீனர்கள் அதிக அளவு பணிபுரிந்து வருவதும் அதனைச் சீனச் சார்பு நிலைக்குத் தள்ளியது.

2019ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய கல்வி நிறுவனங்களில் உயர்கல்வி பயிலச் சேர்ந்த இந்திய மாணவர்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டைவிட 32 விழுக்காடு அதிகரித்துள்ளது. அதே ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு அதிக அளவு குடிபெயர்ந்தோர் எண்ணிக்கையில் சீனாவை இந்தியா முந்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கையில் சீனா, பிரிட்டன் நாட்டவருக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் மூன்றாவதாக உள்ளனர். கல்வி, நலவாழ்வுப் பராமரிப்பு, அறிவியல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்தியர்களுக்கு அதிகம் வாய்ப்புள்ளதாகக் குயீன்ஸ்லாந்தின் கிரிபித் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments