நிர்மலா சீத்தாராமனை பற்றி திரிணமூல் காங்கிரஸ் எம்பி தனிப்பட்ட விமர்சனம்: மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தல்

0 1613

நிநி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை பற்றி திரிணமூல் காங்கிரஸ் எம்பி சவுகதா ராய் தனிப்பட்ட விமர்சனம் செய்ததால் மக்களவையில் கூச்சல்குழப்பம் ஏற்பட்டது.

மக்களவையில் வங்கித்துறை கட்டுப்பாட்டு திருத்த சட்டத்தை எதிர்த்து பேசிய சவுகதா ராய், நிர்மலா சீத்தாராமனை குறிப்பிட்டு சில தகவல்களை கூறினார். இந்த பேச்சு நிர்மலா சீத்தாராமன் மீதான தனிநபர் விமர்சனம் என கூறி பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பல உறுப்பினர்களின் எதிர்ப்பை தொடர்ந்து இந்த பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். சவுகதா ராய் மன்னிப்பு கேட்கவேண்டும் என நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரகலாத் ஜோஷி வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments