நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவச் செல்வங்கள் தற்கொலை முடிவை எடுக்க கூடாது - முதலமைச்சர்

0 1844
வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்களான மாணவச் செல்வங்கள் தற்கொலை முடிவை எடுக்க கூடாது - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தற்கொலை செய்து கொண்டு இறந்த மாணவி ஜோதிஸ்ரீ துர்கா குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் முருகசுந்தரம் என்பவரது மகள் செல்வி ஜோதிஸ்ரீ துர்கா தற்கொலை செய்து கொண்டு இறந்தார் எனும் செய்தியை அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாகக் கூறியுள்ள முதலமைச்சர், வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால் வெற்றி பெறுவது நிச்சயம் என அறிவுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments