5 மாவட்டங்களில் கொரோனா அச்சம்... முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட தமிழக அரசு உத்தரவு..!

0 17924

அடுத்த சில நாட்களில் 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று உச்சத்தை தொட வாய்ப்புள்ளதால் தீவிர நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளர் கே.சண்முகம் அறிவுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பில், தமிழகம் முழுவதும் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் கோவை, சேலம், திருவண்ணாமலை, நாகை, கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தொற்று அடுத்த 10 அல்லது 15 நாட்களில் உச்சத்தை தொடும் என்ற அச்சம் உள்ளதாக கூறியுள்ளார்.

இதனால் அந்த மாவட்டங்களில் காய்ச்சல் முகாம்களை அதிகரிக்க வேண்டும், கொரோனா மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை தயார் படுத்த வேண்டும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும், 5 மாவட்டங்களுக்கும் வந்து செல்வோரை தீவிரமாக கண்காணிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments