"கொரோனாவால் தேசியவாதம் ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக மாறும்"- அமைச்சர் ஜெய்சங்கர்

0 1015
கொரோனாவிற்கு பிந்தைய உலகில் தேசியவாதம் ஒரு ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக இருக்கும் என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார்.

கொரோனாவிற்கு பிந்தைய உலகில் தேசியவாதம் ஒரு ஆதிக்கம் செலுத்தும் அம்சமாக இருக்கும் என, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் எச்சரித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் காணொலி வாயிலாக பங்கேற்று பேசிய அவர், கொரோனா தாக்கத்தால் நாடுகள் அதிக சுயநலமாக மாறும் என்றும், பேச்சுவார்த்தைகள் மேலும் மோசமாகிவிடும் என்றும் தெரிவித்தார்.

சீன விவகாரம் குறித்து பதிலளித்த ஜெய்சங்கர், அமைதியும், சமாதானமுமே அண்டை நாட்டுடனான உறவிற்கு அடிப்படையாக இருக்க வேண்டும் என்றார். மேலும், சுயசார்பு என்பது தேசிய திறன்களை வளர்ப்பதற்கான ஒரு கொள்கை முயற்சி எனவும், இந்தியாவை உலகிற்கு விரோதமாக்குவதற்கானது அல்ல என்றும் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கமளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments