ஜிம் பயிற்சியாளருக்கு ரூ. 73 லட்சம் விலை கொண்ட காரை பரிசளித்தார் நடிகர் பிரபாஸ்

0 14890
பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், தனது ஜிம் பயிற்சியாளருக்கு 73 லட்சம் ரூபாய் விலை கொண்ட ரேஞ்ரோவர் சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், தனது ஜிம் பயிற்சியாளருக்கு 73 லட்சம் ரூபாய் விலை கொண்ட ரேஞ்ரோவர் சொகுசு காரை பரிசாக அளித்துள்ளார்.

பாகுபலி படத்தின் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற பிரபாசின் பயிற்சியாளராக லக்ஸ்மன் ரெட்டி என்பவர் இருக்கிறார்.  2010 ஆம் ஆண்டு உலக அளவிலான பாடிபில்டிங் போட்டியில் லக்ஸ்மன் ரெட்டிசாம்பியன் பட்டம் வென்று அசத்தியவர்.

அவரை மகிழ்விக்கும் வகையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரேஞ்ரோவர் காரை பிரபாஸ் பரிசளித்துள்ளார். காரின் முன்பு பிரபாஸ் குடும்பதினருடன் லக்ஸ்மன் ரெட்டி இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கின்றன.

177 பிஎச்பி பவர் கொண்ட ரேஞ்ரோவர் கார், 7 நொடிகளில் 100 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும் திறன் கொண்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments