நகரங்களிலும் 100 நாள் வேலைத் திட்டம்..!

0 2064
நூறு நாள் வேலைத் திட்டம் எனப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டம் எனப்படும் கிராமப்புற வேலைவாய்ப்பு பெருக்கத் திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

கொரோனா ஊரடங்கால் நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று மத்திய நகர்ப்புற அமைச்சக இணைச் செயலர் சஞ்சய் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முதற்கட்டமாக 35 ஆயிரத்து 520 கோடி ரூபாய் ஒதுக்கப்பட உள்ளது.

நூறு நாள் வேலைத் திட்டத்தை நகரங்களுக்கும் விரிவுபடுத்துவது குறித்து கடந்த ஆண்டே மத்திய அரசு ஆலோசித்து வந்தாலும், கொரோனாவால் அது இப்போது உடனடியாக நடைமுறைக்கு வருகிறது. பெரிய நகரங்களில் வேலைவாய்ப்புக்களை வழங்க தொழில் திறமை தேவை என்பதால், நூறு நாள் வேலைத் திட்டம் சிறிய நகரங்களில் மட்டுமே அமல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments