கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா

0 420

கோவா முதலமைச்சர் பிரமோத் சாவந்துக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

47 வயதாகும் அவர், ட்விட்டரில் வெளியிட்ட பதிவில் அறிகுறியில்லாமல் கொரோனா இருப்பதாகவும், ஆதலால் வீட்டிலேயே தனிமையில் இருக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல் வீட்டில் இருந்தபடி அலுவலக பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், தன்னுடன் மிகவும் நெருக்கமாக தொடர்பில் இருந்த அனைவரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்துவதாகவும் சாவந்த் கூறியுள்ளார்.

மத்திய பிரதேசம், கர்நாடகம், ஹரியானா முதலமைச்சர்களுக்கு ஏற்கெனவே கொரோனா உறுதியானது. இதில் மத்திய பிரதேசம், கர்நாடகம் முதலமைச்சர்கள் குணமான நிலையில், ஹரியானா முதலமைச்சர் சிகிச்சையில் உள்ளார். தற்போது 4ஆவது முதலமைச்சராக சாவந்துக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments