மீண்டும் அத்துமீறிய சீனா.. நீண்டகால மோதலுக்கும் இந்திய ராணுவம் தயார்..! ராணுவ அதிகாரிகள் அதிரடி

0 6561
லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருப்பதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ராணுவ அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு இந்தியா தயாராக இருப்பதாக, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ராணுவ அதிகாரிகள் நடத்திய ஆலோசனையில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கிழக்கு லடாக் எல்லையில், பாங்காங்சோ ஏரியின் தென்கரையில் சீன வீரர்கள் கடந்த 29ஆம் தேதி இரவு மீண்டும் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், அதை இந்திய வீரர்கள் முறியடித்ததாகவும் இந்திய ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் அமன் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் மூத்த ராணுவ அதிகாரிகள் தவிர, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் புலனாய்வு செய்யும் அதிகாரிகள், உளவுத்துறை இயக்குநர் அரவிந்த் குமார், ரா அமைப்பின் செயலாளர் சமந்த் கோயல் மற்றும் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவும் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் கட்டுப்பாட்டு எல்லைப் பகுதியில் அடுத்ததாக சீனா எடுக்கவிருக்கும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாகவும், இதுவரை நடந்த முயற்சிகளை முறியடித்திருந்தாலும், இனி வரும் காலங்களில் எந்த மாதிரியான நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டத்தில் பேசப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

லடாக் பகுதியைத் தவிர வேறு இடங்களில் சீனா தனது விஷமத்தனத்தைக் காட்டினாலும் அதற்கும் எவ்வாறு பதிலடி கொடுப்பது என்று கருத்துக்கள் பரிமாறப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும் லடாக் பகுதியில் சீனாவுடன் நீண்டகால மோதலுக்கு ராணுவம் தயாராக இருப்பதாக அஜித் தோவலிடம் தெரிவித்தாகவும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments