தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் அதிகாரிகள் முன்னிலையில் 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரான எஸ்.வி.சேகர்

0 3604
தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் அதிகாரிகள் முன்னிலையில் 2வது முறையாக விசாரணைக்கு ஆஜரான எஸ்.வி.சேகர்

தேசியக் கொடியை அவமதித்த வழக்கில் நடிகர் எஸ்.வி.சேகர் சட்டையில் தேசியக் கொடியைக் குத்திக் கொண்டு விசாரணைக்கு அதிகாரிகள் முன்னிலையில் 2வது முறையாக ஆஜரானார்.

நடிகர் எஸ்.வி.சேகர் யூ டியூபில் வெளியிட்ட வீடியோவில், காவியைக் களங்கம் எனக் கூறும் முதலமைச்சர் தேசியக் கொடியில் காவியை அகற்றிவிட்டுக் கொடியேற்றுவாரா எனப் பேசினார்.

இது தொடர்பான புகாரில் தேசியக் கொடியை அவமதித்ததாகக் கூறி சென்னை சைபர் கிரைம் போலீசார் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஏற்கெனவே கடந்த 24ஆம் தேதி விசாரணைக்கு ஆஜரான எஸ்.வி.சேகர், இன்று இரண்டாம் முறையாக ஆஜரானார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments