வாத்துக்கு வாழ்வு கொடுத்த வனமகள்..! மலைப்பாம்பிடம் இருந்து மீட்டார்

0 5487
வாத்துக்கு வாழ்வு கொடுத்த வனமகள்..! மலைப்பாம்பிடம் இருந்து மீட்டார்

குஞ்சுகளுடன் மேய்ந்து கொண்டிருந்த தாய் வாத்து ஒன்றை மலைப்பாம்பு சுற்றிவளைத்து விழுங்க முயற்சிக்க, அந்த வாத்தை பெண் ஒருவர் போராடி மீட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

கம்போடியாவின் காட்டுப்பகுதியில் உள்ள பண்ணைத் தோட்டம் ஒன்றில் வாத்து ஒன்று தனது குஞ்சுகளுடன் இரைதேடிக்கொண்டிருந்த போது மலைப்பாம்பு அந்த வாத்தை சுற்றிவளைத்து பிடித்து விழுங்க முயன்றது.

இதனை பார்த்த பெண் ஒருவர், நீளமான கம்பு ஒன்றை வைத்து மலைப்பாம்பை பிரிக்க முயற்சித்தார். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வாத்தை விடாமல் கட்டியாக சுற்றிவைத்திருந்த மலைப்பாம்பிடம் இருந்து வாத்தை பத்திரமாக மீட்டார் அந்த பெண்.

பாம்பை புதற்பகுதிக்கு விரட்டிய அந்தப்பெண், வாத்து படுத்திருந்த குழிக்குள் பதுங்கி இருந்த மற்றொரு மலைபாம்பு ஒன்றை கம்பால் விரட்ட முயன்றபோது, அது வாத்துக் குஞ்சிகளை நோக்கி தாவியது. இதனால் தாய் வாத்தும் குஞ்சிகளும் அச்சத்துடன் அங்கிருந்து நகர்ந்து சென்றன.

அந்த பண்ணை வீட்டில் கோழி, வாத்து, காடை உள்ளிட்ட பறவையினங்களுடன் மலைப்பாம்பு, நாகப்பாம்பு ஆகியவை வளர்க்கப்படுவதாகவும் அவ்வப்போது பாம்புகள் பறவையினங்களை வேட்டையாடுவது வழக்கம் என்றும், அப்படிப்பட்ட ஒரு சூழலில் தான் வாத்துக்கு வாழ்வு கொடுத்த இந்த வீடியோ காட்சி படமாக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments