சுசாந்த் சிங்குக்கு விஷம் கொடுத்து காதலி ரியா கொலை செய்துவிட்டதாக பகீர் புகார்...

0 7858
சுசாந்த் சிங்குக்கு விஷம் கொடுத்து காதலி ரியா கொலை செய்துவிட்டதாக பகீர் புகார்...

பாலிவுட் சுஷாந்த் சிங்கை அவரது காதலி நடிகை ரியா சக்ரபத்தி தான் கொலை செய்திருப்பதாக சுஷாந்தின் தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், தனது மகனுக்கு ரியா தான் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார் என கூறியுள்ளார்.

எனவே சுஷாந்த் மரண வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் ரியாவையும், அவருக்கு உடந்தையாக இருந்தவர்களையும் கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

சுஷாந்த் மரண வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், பணமோசடி என எழுந்த புகார் குறித்து அமலாக்கத்துறையும், ரியா போதைபொருள் பயன்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து போதைபொருள் தடுப்பு பிரிவினரும் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments