கொரோனா நெகட்டிவ் வந்த நபருக்கு 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை... இது வேலூர் அட்ராசிட்டி

0 6726
கொரோனா நெகட்டிவ் வந்த நபரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும் அவலம் வேலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

கொரோனா நெகட்டிவ்  வந்த நபரை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று 6 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வரும் அவலம் வேலூர் மாவட்டத்தில் அரங்கேறியுள்ளது.

கடந்த 14-ம் தேதி கொரோனா பரிசோதனை செய்து கொண்ட சைதாப்பேட்டையை சேர்ந்த பாபு என்பவருக்கு 17-ம் தேதி கொரோனா நெகட்டிவ் என செல்போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.

ஆனால், அன்று மாலையே ஆம்புலன்ஸ் வாகனத்துடன் பாபு வீட்டிற்கு வந்த வேலூர் அரசு மருத்துவமனை ஊழியர்கள், கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி அழைத்துச் சென்றுள்ளனர்.

ஆங்கிலம் படிக்க தெரியாத பாபுவும் தனது செல்போனில் வந்த குறுஞ்செய்தியை படிக்கத் தெரியாமல் கொரோனா பாசிட்டிவ் என நினைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 நாட்கள் ஆன நிலையில், பக்கத்து படுக்கையில் இருந்த நபர் அந்த குறுஞ்செய்தியை பார்த்த பிறகு தான் நெகட்டிவ் என மெசேஜ் வந்திருப்பது பாபுவுக்கு தெரியவந்துள்ளது. இதனிடையே, ஆடியோ பதிவு ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார். 

இது தொடர்பாக பதிலளித்த வேலூர் மாவட்ட மருத்துவ துணை இயக்குநர் மதிவாணன், புகார்கள் குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments