ரஷ்யாவில் உயிரிழந்த தமிழக மாணவர்கள் 4 பேரின் உடல்கள் சென்னை வந்தடைந்தன

0 2115

ரஷியாவில் உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் 4 பேரின் உடல்களும்13 நாட்களுக்கு பின்,சென்னை வந்தடைந்துள்ளது.

ரஷியாவின் வோல்கோகிராட் மருத்துவ பல்கலைக் கழகத்தில் மருத்துவ மேற்படிப்பு படித்து வந்த கடலூர் விக்னேஷ், திருப்பூர் முகமது ஆசிக், சேலம் மனோஜ் ஆனந்த் மற்றும் மருத்துவ படிப்பு படித்த சென்னை ஸ்டீபன் லிபாகு ஆகிய 4 பேரும், கடந்த 8 ஆம் தேதி, வால்கா ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எடுத்த முயற்சியைத் தொடர்ந்து, 4 மாணவர்களின் உடல்களும் துருக்கி வழியாக கார்கோ விமானம் மூலம் சென்னை - பழைய விமான நிலையத்திற்கு மாலையில் வந்து சேர்ந்தன. கொரோனா நடை முறை சோதனைகள் முடிவடைந்ததும், 4 மாணவர்களின் உடல்களும் தமிழக அரசு அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இதன்பின்பு, ஒவ்வொரு மாணவர்களின் உடல்களும் தனித்தனி ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments