தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது - உயர்நீதிமன்றம்

0 2275
தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தினால் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் - உயர்நீதிமன்றம் நம்பிக்கை

விநாயகர் சதுர்த்திக்குத் தடையை மீறி ஊர்வலம் செல்ல முற்படுவோர் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

விநாயகர் சதுர்த்தியன்று பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்து முன்னணியினர் ஒரு லட்சத்து 50 ஆயிரம் இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவோம் எனத் தெரிவித்துள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிலை வைத்து வழிபடுவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், தடையை மீறி ஊர்வலமாக எடுத்துச் சென்றால் இந்து முன்னணித் தலைவரைக் கைது செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடத் தமிழக அரசு ஏற்கெனவே தடைவிதித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய  நீதிபதிகள், அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என நம்புவதாகத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments