ரூ.1000 கோடி ஹவாலா மோசடி.. 40 போலி வங்கிக் கணக்குகள்..! சிக்கிய சீன நபர்

0 2792
ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா, பண மோசடி தொடர்பாக சீனாவைச் சேர்ந்தவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஆயிரம் கோடி ரூபாய் ஹவாலா, பண மோசடி தொடர்பாக சீனாவைச் சேர்ந்தவர் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த சார்லி பெங் என அழைக்கப்படும் லுயோ சங் என்பவர் மேலும் சில சீன வங்கி அதிகாரிகள் துணையுடன் 40 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி போலி நிறுவனங்களை இயக்கி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 11ம் தேதி லுயோ மற்றும் அவருக்குத் துணைபோன அதிகாரிகளின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது லுயோ ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஹவாலா மற்றும் பணமோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. முன்னதாக தலாய்லாமாவை உளவு பார்த்ததாக லுயோ டெல்லியில் கைது செய்யப்பட்டிருந்த அவர், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments