கொரோனா தாக்கத்தால் ககன்யான் திட்டம் தாமதமாகும் எனத் தகவல்

0 960
கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி திட்டம் ககன்யான் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் தாக்கத்தின் எதிரொலியாக டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி திட்டம் ககன்யான் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. 

கொரோனா வைரஸ் தொற்றால் விண்வெளி அமைப்பின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல பயணங்களில் தாமதம் ஏற்படும் என அரசிடம் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டுள்ளாக இஸ்ரோ அதிகாரிகள் கூறுகின்றனர். இந்தத் திட்டங்களில் சந்திரயான் -3 மற்றும் ககன்யான் ஆகியவை அடங்கும் என்று குறிப்பிட்டுள்ள அவர்கள், சந்திரயான் 3 க்கான பணிகள் நடப்பாண்டின் பிற்பகுதியில் தொடங்கத் திட்டமிட்டிருந்தாகத் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரோவைச் சேர்ந்த பலர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாலும், அத்தியாவசியப் பணிகள் மட்டுமே இஸ்ரோவில் நடந்து வருவதாலும் ககன்யான் திட்டம் தாமதமாகும் என இஸ்ரோ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments