மயக்க நிலையில் இருந்து மீண்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்...!

0 9258
மயக்க நிலையில் இருந்து மீண்டார் எஸ்.பி. பாலசுப்பிரமணியம்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா அறிகுறிகளுடன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்றுமுன்தினம் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து நேற்று எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், மயக்கநிலையில் இருந்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம் தற்போது அதில் இருந்து மீண்டுள்ளதாகவும், அவர் அவ்வப்போது கண்விழிப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், நுரையீரல் தொற்று காரணமாக வென்டிலேட்டர் உதவியுடன் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments