காபித்தூளில் மிகப்பெரிய மகாத்மா காந்தியின் சித்திரம் வரைந்து புதிய சாதனை

0 1233
சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தியடிகளின் பிரம்மாண்டமான உருவத்தை காபித்தூளில் சித்திரமாக்கும் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனை கின்னஸ் சாதனையில் இடம்பெறவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர தினத்தை முன்னிட்டு காந்தியடிகளின் பிரம்மாண்டமான உருவத்தை காபித்தூளில் சித்திரமாக்கும் சாதனை நிகழ்த்தப்பட்டது. இந்த சாதனை கின்னஸ் சாதனையில் இடம்பெறவும் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த சிவராமன் என்ற ஓவியக் கலைஞர் இந்த முயற்சியில் ஈடுபட்டார். காபித்தூளைக் கொண்டு மகாத்மா காந்தியின் பொக்கை வாய் புன்னகையுடன் கூடிய அழகான மிகப் பெரிய சித்திரத்தை அவர் 24 மணி நேரத்தில் வரைந்தார்.இதன் மூலம் முந்தைய கின்னஸ் சாதனைகளை அவர் முறியடித்துள்ளார்.

சுதந்திர தினத்தைக் கொண்டாட மாணவர்களைப் பள்ளிக்கு அழைக்க முடியாத சூழலில் இந்த வித்தியாசமான சாதனையை நிகழ்த்தியதாக இந்துஸ்தான் சர்வதேச பள்ளியின் தலைமை ஆசிரியையான ராதா ஸ்ரீகாந்த் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments