நேர்மையாக வரி செலுத்துபவர்களை ஊக்குவிக்கும் திட்டம் 21ம் நூற்றாண்டின் புதிய அத்தியாயம்-பிரதமர் மோடி

0 2772

உரிய நேரத்தில் வரி செலுத்துவோர் நாட்டின் வளர்ச்சியில் அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள் என கூறியுள்ள பிரதமர் மோடி, வரி விதிப்பு தொடர்பான சீர்திருத்தங்கள் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒளிவுமறைவு அற்ற வரி விதிப்பும் நேர்மையாக வரி செலுத்துவோரை கவுரவித்தலும் என்ற புதிய வரிசீர்திருத்த திட்டத்தை நிதி அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இதை காணொலியில் துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசினார். அப்போது நேர்மையாக வரி செலுத்துபவர்களை பாராட்டிய அவர், நாட்டின் வளர்ச்சியில் அவர்களின் பங்கு முக்கியமானது என்று கூறினார்.

வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கும், பாதுகாப்பு அற்றவர்களுக்கு பாதுகாப்பையும், ஏழைகளுக்கு நிதியுதவியையும் கடந்த ஆறு ஆண்டுகளாக வழங்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்துவதாக மோடி கூறினார்.

எந்த சட்டமும் சிக்கலானதாக இருந்தால் அதை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படும் என்ற மோடி, இந்த புதிய வரிச்சட்டத்தால் வரி செலுத்துவோரும், நாடும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார். வரிவிதிப்பு, வசூல், ரிபண்ட் என அனைத்தும் கணினி வாயிலாக நடக்கும் என்ற அவர், நமது வரி விதிப்பு முறை சிக்கல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றார்.

கடந்த 6 ஆண்டுகளில் வரி வசூல் குறித்த வழக்குகள் கணிசமாக குறைந்துள்ளதாகவும், வருமானவரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரண்டரை கோடி வரை அதிகரித்துள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார். நாட்டில் உள்ள அனைரும் வருமானவரிதாக்கல் செய்ய முன்வருமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments