மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 49 ஆக உயர்வு

0 2927
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

இன்று டிரோன்கள் வாயிலாக ஆறுகளில் நடத்தப்பட்ட தேடுதலில் சில கிலோ மீட்டர்கள் தொலைவில் 6 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் 21 பேர் காணாமல் போயுள்ள நிலையில் அவர்களை தேடும் பணி தொடர்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என கூறப்படுகிறது.

மூணாறில் வசிக்கும் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் அனைவரும் தமிழகத்தை சேர்ந்தவர்களாவர்.

நிலச்சரிவால் ஏற்பட்ட மரணங்களை தொடர்ந்து அவர்களின் உறவினர்கள் கூட்டம் கூட்டமாக இடுக்கி மாவட்டத்திற்கு வருவதால் கொரோனா தொற்று அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், வருவாய் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments