இந்தியாவில் கொரோனா பரவல் புதிய உச்சம்.. ஒரே நாளில் 62,538பேருக்கு பாதிப்பு..!

0 1345
நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 62,538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 62,538 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதேபோல் ஒரே நாளில் கொரோனாவுக்கு 886 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 27 ஆயிரத்து 75ஆகவும், பலி எண்ணிக்கை 41 ஆயிரத்து 585ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவுக்கு 6 லட்சத்து 7 ஆயிரத்து 384 பேர் சிகிச்சை எடுக்கும் நிலையில், 13 லட்சத்து 78 ஆயிரத்து 106 பேர் குணமாகியுள்ளனர். நேற்று ஒரு நாளில் 5 லட்சத்து 74 ஆயிரத்து 783 பேரின் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, நாட்டில் இதுவரை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 2 கோடியே 27 லட்சத்து 24 ஆயிரத்து 134ஆக உயர்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments