நடிகர் சுசாந்த் வழக்கை சிபிஐ விசாரணைக்கு பீகார் முதலமைச்சர் பரிந்துரை

0 948
பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்த சிபிஐ விசாரணைக்கு பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் பரிந்துரைத்துள்ளார். சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சுசாந்தின் தந்தை தொலைபேசியில் வற்புறுத்தியதாகவும், குடும்பத்தினரின் அனுமதி உள்ளதால் அதற்கு பரிந்துரைத்துள்ளதாகவும் நிதிஷ் குமார் கூறியதாக ஊடக செய்திகள் வெளியாகி உள்ளன.

அதே நேரம் சுசாந்த் மரணம் குறித்து சிபிஐ  விசாரணைக்கு உத்தரவிடமுடியாது என மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

பீகாரை சேர்ந்த சுசாந்த், கடந்த ஜூன் மாதம் 14 ஆம் தேதி மும்பையில் உள்ள பிளாட்டில் இறந்த நிலையில் காணப்பட்டார். சுமார் 50 நாட்கள் கடந்த பிறகும் அவரது மரணம் பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments