வெறிச்சோடிய காவிரிக் கரை.. களையிழந்த ஆடிப் பெருக்கு..!

0 1557
கொரோனா பரவலைத் தடுக்க ஆடிப் பெருக்கையொட்டிப் பொதுமக்கள் ஆற்றில் நீராடத் தடை விதிக்கப்பட்டதால் காவிரியாற்றின் முதன்மையான படித் துறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கொரோனா பரவலைத் தடுக்க ஆடிப் பெருக்கையொட்டிப் பொதுமக்கள் ஆற்றில் நீராடத் தடை விதிக்கப்பட்டதால் காவிரியாற்றின் முதன்மையான படித் துறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

ஆடி 18ஆம் நாளில் பொதுமக்கள் ஆற்றில் நீராடி ஆடிப்பெருக்கு விழாவைக் கொண்டாடுவது வழக்கம். கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு கடைப்பிடிப்பதால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கைக் கொண்டாடத் தடை விதிக்கப்பட்டது.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல், சேலம் மாவட்டம் மேட்டூர், பூலாம்பட்டி, ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், தவிட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் காவிரியாற்றில் பொதுமக்கள் நீராடும் துறைகளில் காவல்துறையினர் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

இதேபோல் திருச்சி முக்கொம்பு, திருவரங்கம், தஞ்சாவூர், கும்பகோணம் மயிலாடுதுறை ஆகிய இடங்களிலும் பொதுமக்கள் ஆற்றில் நீராடுவதைத் தடுக்கக் காவல்துறையினர் நிறுத்தப்பட்டனர். இதனால் ஆடிப்பெருக்கு நாளில் ஆற்றுப் படித்துறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன. ஒருசில இடங்களில் தடையை மீறிச் சிலர் ஆற்றில் நீராடி வழிபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments