சுஷாந்த் மரண வழக்கு: போலீசார் கண்காணிப்பில் காதலி ரியா சக்கரவர்த்தி

0 1953

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மரண வழக்கில் அவரது காதலியும் நடிகையுமான ரியா சக்கரவர்த்தியை கண்காணித்து வருவதாக பீகார் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அம்மாநில டிஜிபி குப்தேஷவர் பாண்டே செய்தியாளர்களிடம் பேசும்போது, சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக தடயவியல் அறிக்கை, விசாரணை அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மகாராஷ்டிரா காவல்துறையிடம் கேட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது காதலி ரியா சக்கரவர்த்தி தங்களது கண்காணிப்பில் இருப்பதாகவும் தேவைப்பட்டால் விசாரணை நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே சுஷாந்த் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதில், எந்த ஆட்சேபனையும் இல்லை என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments