’பாதுகாப்பு உடை அணிந்து தந்தைக்கு மகன் செய்த இறுதிச்சடங்கு’ நெகிழ்ச்சி சம்பவம்..!

0 3791

புதுக்கோட்டை மாவட்டத்தில் தந்தை இறந்ததால் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் மகன் இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆலங்குடியை சேர்ந்த தமிழரசன் என்பவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவருக்கு இறுதி சடங்கு செய்யும் அவரது ஒரே மகன் அரங்கநாதன் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு புதுக்கோட்டை ராணியார் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் தந்தை இறந்ததையறிந்த அவர், சுகாதாரத் துறையினர் மூலம் 108 ஆம்புலன்ஸ் மூலம் அரங்கநாதன் அழைத்துவரப்பட்டு, வீட்டுக்குள் செல்லாமல் வாசலிலேயே தந்தையின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்தார். இந்தச் சம்பவம் காண்போரை கலங்கச் செய்வதாக இருந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments