நில விவகாரம், திரைப்பட பாணியில் மோதிக்கொண்ட இரு கிராம மக்கள்

0 1872

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நிலத்தகராறு காரணமாக இரண்டு கிராமத்தினர் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

ஹனுமபுரம் பகுதியைச் சேர்ந்த சேஷாத்ரி மற்றும் ரங்கையா ஆகியோருக்கு இடையேயான, நிலத்தகராறு தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், ஒரு பிரிவைச் சேர்ந்தவர்கள் டிராக்டர் கொண்டு நிலத்தை உழுததால் ஆத்திரமடைந்த மற்றொரு பிரிவினர் அரிவாள், கம்பு மற்றும் கல் ஆகியவற்றைக் கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் இணைந்து, மாறி மாறி கண்மூடித்தனமாக தாக்கிக் கொண்டதில், 16 பேர் படுகாயமடைந்தது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments