பஞ்சாபில் விஷச்சாராயம் அருந்தி 3 நாட்களில் 38 பேர் உயிரிழப்பு..!

பஞ்சாபில் விஷசாராயம் அருந்தி 3 நாட்களில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாபில் விஷசாராயம் அருந்தி 3 நாட்களில் 38 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 29ம் தேதியன்று மாநில தலைநகர் அமிர்தசரஸ் மாவட்டத்தில் சாராயம் அருந்திய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொடர்ந்து, படாலா, டர்ன் டரன் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மது அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
மாநிலத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே, விஷசாராயம் பருகி 38 பேர் உயிரிழந்தது தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளதாகவும், குற்றவாளிகள் யாரும் தண்டனையில் இருந்து தப்ப முடியாது எனவும், பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரேந்தர் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Comments