இந்தியாவில் ரபேல்.. அச்சத்தில் பாகிஸ்தான்..!

0 7084
ரபேல் விமானங்களால் இந்தியாவின் வான்போர் திறன் அதிகரித்துள்ள நிலையில், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தின் விளைவாக, இந்தியா தேவைக்கு அதிகமாக ராணுவ தளவாடங்களை வாங்கி குவிப்பதாக பாகிஸ்தான் கூறி உள்ள

ரபேல் விமானங்களால் இந்தியாவின் வான்போர் திறன் அதிகரித்துள்ள நிலையில், அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சத்தின் விளைவாக, இந்தியா தேவைக்கு அதிகமாக ராணுவ தளவாடங்களை வாங்கி குவிப்பதாக பாகிஸ்தான் கூறி உள்ளது.

இஸ்லாமாத்தில் இதை தெரிவித்த பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், இந்தியாவின் இந்த நடவடிக்கையால் தெற்காசியாவில் ஆயுதப் போட்டி உருவாகும் என்றும் உலக நாடுகள் தலையிட்டு, ஆயுதங்கள் வாங்குவதை விட்டு  இந்தியாவை தடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

பிரான்சில் இருந்து 5 ரபேல் விமானங்கள் நேற்று அம்பாலாவுக்கு வந்த பின்னர், பாகிஸ்தானின் முதலாவது அதிகாரப்பூர்வ எதிர்வினை இது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments