அவனா நீ… அமெரிக்க மாப்பிள்ளை..! பாதிக்கப்பட்ட பச்சைக்கிளி..!

0 37279

ஆந்திர மாநிலம் குண்டூரில் 70 சவரன் நகைகளுடன், 50 லட்சம் ரூபாயையும் வரதட்சணையாக பெற்று கொண்டு ஒன்றரை மாதமாக மனைவியை தொடாமல் முதலிரவை தள்ளிப்போட்ட அமெரிக்க மாப்பிள்ளை போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அமெரிக்காவில் ஆண் நண்பருடன் குடும்பம் நடத்தியவர், தனது புது மனைவிக்கு விதித்த விபரீத நிபந்தனை குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதான பாஸ்கர் என்பவர் அமெரிக்காவில் குடியுரிமை பெற்று பணி செய்து வந்தார். பெற்றோர் அவருக்கு திருமணம் செய்ய குண்டூரை சேர்ந்த 25 வயது பெண்ணை பேசி முடித்து நிச்சயம் செய்தனர்.

அதன்படி அமெரிக்க மாப்பிள்ளை பாஸ்கருக்கும், குண்டூர் பெண்ணுக்கும், கடந்த மார்ச் மாதம் 18ந்தேதி நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டும் பங்கேற்க எளிய முறையில் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது 50 லட்சம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் 70 சவரன் நகைகளை பெண் வீட்டார் வழங்கினர். மணமகள் வீட்டில் முதலிரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் பல கனவுகளுடன் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்த வைத்த அந்த பெண்ணுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

முதல் இரவில் அமெரிக்க மாப்பிள்ளை தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறி குப்புறப்படுத்து குறட்டை விட்டு தூங்கியதாக கூறப்படுகின்றது. அன்று மட்டுமல்லாமல் ஒவ்வொரு நாளும் புதுப்பெண்ணிடம் ஒரு காரணம் கூறி துங்கச்செல்வதை பாஸ்கர் வழக்கப்படுத்தியுள்ளார்.

ஒன்றரை மாதங்களாக தாம்பத்யம் இல்லாமல் தொடர்ந்து ஏமாற்றமடைந்த புதுப்பெண் தனது தோழிகள் மூலம் அமெரிக்க மாப்பிள்ளையின் வினோத நடவடிக்கைகள் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த புதுப்பெண்ணின் பெற்றோர், மாப்பிள்ளை பாஸ்கரின் பெற்றோரிடம் கூற இரு வீட்டாரின் குடும்ப பஞ்சாயத்து கூடியுள்ளது. அதில் பாஸ்கரை அழைத்து பேசியவர்கள், திருமணம் செய்து வைக்கப்பட்ட பெண் பிடிக்கவில்லையா? என கேட்க அதற்கு சரியான பதில் கூறாமல் அவர் தட்டி கழித்துள்ளார்.

இறுதியில் அனைவரும் அதட்டிக் கேட்டதால் வேறு வழியின்றி அமெரிக்க மாப்பிள்ளை தான் யார் ? என்ற உண்மையை சபையில் போட்டு உடைத்துள்ளார். தான் அமெரிக்காவைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன், கடந்த 4 வருடமாக நல்ல புரிதலுடன் குடும்பம் நடத்தி வருவதாகவும் எனவே தனக்கு பெண்கள் மீதான மோகம் இல்லை எனவும் கூறி அதிரவைத்துள்ளார். இந்த தகவலை அறிந்த புதுப்பெண் விரக்தியில் தனது தாய்வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகின்றது.

ஒரு கட்டத்தில் அண்மையில் நடந்த சமாதான பேச்சுவர்த்தையின் போது, தனது மனைவியை தனியாக அழைத்துச் சென்று சமாதானப்படுத்துவது போல விபரீத நிபந்தனை ஒன்றை விதித்துள்ளார் பாஸ்கர். தன்னுடன் தொடர்ந்து வாழ விரும்பினால், அமெரிக்கா அழைத்து செல்வதாகவும், அங்கு வந்து தன்னுடன் ஏற்கனவே குடும்பம் நடத்திவரும் ஆண் நண்பருக்கும் மனைவியாக இருக்க வேண்டும் என்று கூறி கூடுதலாக அதிர்ச்சியூட்டி உள்ளார்.

இதையடுத்து கணவனின் விபரீத திட்டத்தை அறிந்து அதிர்ந்து போன பெண்ணின் பெற்றோர் அமெரிக்க மாப்பிள்ளை பாஸ்கர் மீது குண்டூர் புறநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் அமெரிக்க மாப்பிள்ளை மற்றும் அவரது பெற்றோரை பிடித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெளி நாட்டு மாப்பிள்ளை மோகத்தில் தங்கள் பெண்ணுக்கு வரன் தேடும் பெற்றோர் சம்பந்தப்பட்ட மாப்பிள்ளையின் பின்புலம் தெரியாமல் அவசரப்பட்டு திருமணம் செய்து வைத்தால் என்ன மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments