கொரோனா தடுப்பூசி 3 ஆம் கட்ட சோதனைக்கு 5 இடங்கள் தயார்..!

0 3085
ஆக்ஸ்போர்டு பல்கலை.-ஆஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் 3 ஆவது இறுதிகட்ட மனித சோதனைக்காக நாட்டில் 5 இடங்கள் தயார்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனேகா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியின் 3 ஆவது இறுதிகட்ட மனித சோதனைக்காக நாட்டில் 5 இடங்கள் தயாராக உள்ளது என மத்திய பயோடெக்னாலஜி துறை தெரிவித்துள்ளது.

இந்தியர்களுக்கு இந்த தடுப்பூசியை போடுவதற்கு முன்னர் இறுதி கட்ட சோதனை குறித்த தகவல்களை கையில் வைத்திருப்பது அவசியம் என்பதால் பயோடெக்னாலஜி துறை இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

தடுப்பூசிக்கான நிதியுதவி, தேவையான சட்ட உரிமங்களை பெறுதல் போன்றவற்றிலும் பயோடெக்னாலஜி துறை உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா இந்த தடுப்பூசிக்கான 2 மற்றும் 3 ஆம் கட்ட மனித சோதனைக்கு அனுமதி பெற்றுள்ளதுடன் அதை பெருமளவில் உற்பத்தி செய்வதற்கான உரிமத்தையும் பெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments