வ.உ.சி கல்லூரியை வம்பில் சிக்கவிட்ட ஆடியோ அரக்கன் கைது..!

0 3114

தூத்துக்குடியில் உள்ள வ.உ.சி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தங்கள் சாதியினருக்கு மட்டும் தான் சொந்தம் என்றும், அங்கு படிக்க வரும் மற்ற சாதியினரை இழிவுபடுத்தியும் ஆடியோ வெளியிட்ட நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் முடிவைதானேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்முருகன் என்பவர் வாட்ஸ் அப்பில் சர்ச்சைக்குரிய வகையில் இரு ஆடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

அதில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து பேசி இருந்த கல்முருகன், அந்த கல்லூரியில் தங்கள் சாதி மாணவர்கள் மட்டுமே படிக்க வேண்டும் என்றும், மற்ற சாதி மாணவர்கள் எல்லாம் ஏன் இங்கு வருகிறீர்கள் என்றும் இழிவுபடுத்தி பேசி இருந்தார்

இவரது இந்த ஆடியோ வாட்ஸ் அப்பில் பரவிய நிலையில், இது தொடர்பாக உடனடி நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டார். இதையடுத்து வாட்ஸ் அப்பில் வம்பிழுத்து சமூக அமைதிக்கு பங்கம் விளைவிக்க முயன்றதாக கல்முருகன் என்ற வேல்முருகனை காவல்துறையினர் கைது செய்தனர்.

இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடிதடி வழக்கில் சிறைக்குச் சென்று வந்ததாகவும், தான் சார்ந்த சமூகத்தில் தன்னை ஒரு சாதியத் தலைவராக நிலை நிறுத்த இந்த விபரீத ஆடியோவை வெளியிட்டதும் தெரியவந்தது. தனது தவறை உணர்ந்த கல்முருகன் சாதியை முன்னிறுத்திப் பேசியதற்காக மன்னிப்புக் கோரியுள்ளார்.

 

வாட்ஸ் அப், முக நூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தங்கள் கருத்தை சொல்வதாக நினைத்து சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் பேசுவது தண்டனைக்குரிய குற்றம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments