காங்கிரஸ் அறக்கட்டளைகள் குறித்த விசாரணைக்கு உத்தரவு..!

0 1991
காங்.அறக்கட்டளைகள் - அரியானா விசாரணை

நேரு-இந்திரா காந்தி குடும்பங்களுக்கு தொடர்புடைய காங்கிரஸ் அறக்கட்டளைகள், அரியானாவில் வாங்கியதாக கூறப்படும் சொத்துக்கள் குறித்த விசாரணைக்கு, மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி பவுண்டேஷன் மற்றும் இந்திரா காந்தி அறக்கட்டளை ஆகியன சட்ட விதிகளை மீறி நன்கொடைகளை பெற்றதாக கூறப்படும் விவகாரத்தில் அமலாக்கப்பிரிவு விசாரணை நடத்துகிறது.

இந்த நிலையில் அரியானா மாநிலத்தில் கடந்த 2004 முதல் 2014 வரையிலான காலகட்ட காங்கிரஸ் ஆட்சியில் முறைகேடாக சொத்துக்கள் வாங்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது.

அது போன்று சோனியா காந்தி அவரது மருமகன் ராபர்ட் வதேரா, காங்கிரஸ் குடும்பத்தின் கையில் உள்ள அசோசியேட்டடு ஜர்னல்ஸ் லிமிட்டட் நிறுவனம் ஆகியோருக்கு குருகிராமில் நிலம் மறுஒதுக்கீடு செய்யப்பட்டதுதொடர்பாகவும் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments