மறைந்த இயக்குனர் மகேந்திரனின் பிறந்தநாள் - நடிகர் ரஜினிகாந்த் உருக்கமான வீடியோ

0 3553

பணம், பெயர், புகழ் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், தரமான தமிழ்ப்படங்களை இயக்கி உலகத் தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என எண்ணியவர் மறைந்த இயக்குநர் மகேந்திரன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள், நண்டு உள்ளிட்ட வித்தியாசமான படைப்புகளை கொடுத்த மறைந்த இயக்குனர் மகேந்திரனின் 81ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள காணொளி பதிவில், “உதிரிப்பூக்கள்” படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் வடித்ததாகக் கூறியுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments