அமெரிக்காவில் இன, நிற பாகுபாடுக்கு எதிரான போராட்டமே கொரோனா அதிகம் பரவ காரணம் - ட்ரம்ப்

0 1224
அமெரிக்காவில் இன மற்றும் நிற பாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டங்களால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார்.

அமெரிக்காவில் இன மற்றும் நிற பாகுபாடுக்கு எதிராக நடந்த போராட்டங்களால் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குற்றஞ்சாட்டி உள்ளார். அந்நாட்டில் கொரோனா தொற்றால் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், போலீசுக்கு எதிராகவும் இனபாகுபாடுக்கு எதிராகவும் போராட்டம் நடத்திய பிளாக் லைவ்ஸ் மேட்டர் அமைப்பைச் சேர்ந்த இளைஞர்களே கொரோனா பரவலுக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.

விடுமுறை நாட்கள், பார்கள், கடற்கரைகளில் மக்கள் அதிகம் கூடியதும் சுமார் 3 ஆயிரம் கிலோ மீட்டர் எல்லையை பகிர்ந்துகொள்ளும் மெக்சிகோவும் நோய் பரவலுக்கான காரணிகள் என்று அதிபர் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments