ம.பி.அமைச்சருக்கு கொரோனா தொற்று..!

0 543
மத்திய பிரதேசத்தில், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய பிரதேசத்தில், முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

50 வயதான அமைச்சர் அரவிந்த் சிங் பதோரியா, தமக்கு லேசான தொண்டை பாதிப்பு மட்டுமே உள்ளதாகவும், சோதனையில் தொற்று உறுதியானதை அடுத்து மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். 

அமைச்சரவைக் கூட்டத்திற்கு முன், கடந்த வாரம், தமது சொந்த ஊரில் சுமார் ஆயிரம் ஆதரவாளர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் இவர் கலந்து கொண்டார். இவரையும் சேர்த்து பாஜக வில்  4 பேர், காங்கிரசில்  3 பேர் என மொத்தம் 7 எம்எல்ஏக்களுக்கு  மத்திய பிரதேசத்தில் கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments