கோவேக்சின் 2 ஆம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் - எய்ம்ஸ் இயக்குநர்

0 5262
கோவேக்சின் தடுப்பூசி ஆராய்ச்சியின் இரண்டாம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

கோவேக்சின் தடுப்பூசி ஆராய்ச்சியின் இரண்டாம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.

ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் மருந்து தயாரிப்பு நிறுவனம், தேசிய வைரஸ் இயல் ஆய்வு நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் உடன் இணைந்து, கோவேக்சின் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

மனிதர்கள் மீதான இரண்டு கட்ட பரிசோதனைகளுக்கு அனுமதியையும் பெற்று, தடுப்பூசி முதல்கட்ட பரிசோதனை தொடங்கியுள்ளது. 375 பேரை கொண்டு நடத்தப்படும் இந்த பரிசோதனையை, டெல்லி எய்ம்ஸ் உள்ளிட்ட நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள 12 மருத்துவமனைகள் மேற்கொள்கின்றன.

இதுகுறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா, எய்ம்ஸில் மனிதர்கள் மீதான முதல் கட்ட பரிசோதனை தொடங்கிவிட்டதாக தெரிவித்தார்.

வேறு எந்த நோய்களாலும் பாதிக்கப்படாதவர்களே இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மனிதர்கள் மீதான இரண்டாம் கட்ட பரிசோதனையில், 750 பேர் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார். இந்த தடுப்பூசி முயற்சி இந்தியாவின் மிகப்பெரிய சாதனைகளில் ஒன்றாக அமையும் என நம்பிக்கை தெரிவித்தார்.

நாடுதழுவிய அளவில் கொரோனா தொற்று சமூக பரவல் என்ற கட்டத்தை எட்டிவிட்டதாகக் கூறுவதற்கு ஆதாரம் இல்லை என்று குறிப்பிட்ட ரண்தீப், சில பகுதிகளில் உள்ளூர் அளவில் சமூக பரவல் நிலை இருக்கலாம் என கூறினார்.

சில பகுதிகளில் கொரோனா பரவல் உச்சநிலையை அடைந்திருப்பதாகவும், டெல்லி அந்த நிலையை எட்டியிருப்பதாக கருத இடமுண்டு என்று கூறிய எய்ம்ஸ் இயக்குநர் டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியிருப்பதாக சுட்டிக்காட்டினார்.

இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்காவுடன் ஒப்பிடும்போது, இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா இறப்பு விகிதம் மிகமிகக் குறைவு என்றும் ரண்தீப் குலேரியா விளக்கம் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments